என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு ஆய்வு கூட்டம்- அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் நடந்தது
- நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் காலங்களில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்பதற்கு தேவையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
- பயிற்சி பெற்ற குழுவினர் மாவட்ட நிர்வாகத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை:
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் நெல்லையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் இன்று நடைபெற்றது. சபாநாயகர் அப்பாவு, மாவட்ட கலெக்டர் விஷ்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரிடர் மீட்பு
இதனையொட்டி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் காலங்களில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்பதற்கு தேவையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
மழை காலங்களில் தீயணைப்பு துறை சார்பில் பயன்படுத்தக்கூடிய ரப்பர் மிதவை படகுகள், மிதவைகள் மற்றும் வெள்ள காலங்களில் மக்களை மீட்க பயன்படுத்தப்படும் லைப் ஜாக்கெட்டுகள் உள்ளிட்டவைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
கண்காட்சி
மேலும் மழை வெள்ள காலங்களில் முறிந்து விழும் மரங்களை உடனடியாக வெட்டி அப்புறப்படுத்துவதற்கு தேவையான எந்திரங்கள், மின்சாரம் இல்லாத இருள் சூழ்ந்த பகுதிகளில் வெளிச்சம் ஏற்படுத்த தேவையான ஜெனரேட்டர்கள் உள்ளிட்டவைகளும் காட்சிப்படுத்தப்பட்டன.
இதுதவிர மத்திய, மாநில அரசுகள் மூலம் பேரிடர் பயிற்சி பெற்ற பேரிடர் கால நண்பன் குழுவினர் பல்வேறு மீட்பு பொருட்களையும் காட்சிப்படுத்தியிருந்தனர். வெள்ள காலங்களில் மக்களை மீட்க பயன்படுத்தப்படும் தேங்காய் மட்டைகள் மூலம் தயாரிக்கப்படும் படகு, விபத்து ஏற்பட்டால் அங்கிருந்து அவர்களை மீட்க பயன்படுத்தப்படும் சாதாரண பொருட்களை வைத்து தயார் செய்யப்படும் ஸ்ட்ரக்சர்கள் போன்றவைகள் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன.
பாளையங்கால்வாய்
மேலும் மழை வெள்ள காலங்களில் வீட்டுக்குள் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளை மீட்பதற்கு பயிற்சி பெற்ற குழுவினர் மாவட்ட நிர்வாகத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மூலம் பிடிக்கப்படும் பாம்புகளை எவ்வாறு பிடித்து காட்டுப்பகுதியில் விடப்படும் என்பன போன்ற காட்சிகளும் தத்ரூபமாக செய்து காட்டப்பட்டது.
அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் மாவட்ட கலெக்டர் விஷ்ணு முன்னிலையில் 5 அடி நீளம் கொண்ட 3 பாம்புகளை மீட்கும் காட்சிகள் செய்து காட்டப்பட்டது. முன்னதாக மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் பாளையங்கால்வாய் தூர்வாறும் பணியினை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மேலப்பாளையம் மண்டலம் 51-வது வார்டுக்கு உட்பட்ட என்.ஜி.ஓ. காலனியில் பூங்காவை திறந்து வைத்தார்.
கலந்து கொண்டவர்கள்
இந்த நிகழ்ச்சிகளில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, ஆர்.டி.ஓ. சந்திரசேகர், பேரிடர் மீட்பு தாசில்தார் செல்வன், தி.மு.க. மத்திய மாவட்ட துணை செயலாளர்கள் விஜிலா சத்தயானந்த், எஸ்.வி.சுரேஷ், செயற்குழு உறுப்பினர் பேச்சிபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், கவுன்சிலர்கள் பாஸ்கர், கனகராஜ் மற்றும் நிர்வாகிகள் கண்ணன், பழனிவேல்பாண்டியன் உள்பட கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்