என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோவையில் வடமாநில வாலிபர் தற்கொலை
  X

  கோவையில் வடமாநில வாலிபர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஓட்டலில் சமையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
  • பேஸ்-புக்கில் அதிக நேரம் பேசி வந்ததாக தெரிகிறது.

  கோவை

  மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் சாகர் உரையின் (வயது 22). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை வந்தார்.

  பின்னர் சிவானந்தா காலனியில் தங்கி அங்குள்ள ஒரு ஓட்டலில் சமையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

  இந்த நிலையில் அவர் வேலை நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் தனது செல்போனில் சமூக வலைதளங்களில் நேரத்தை கழித்து வந்தார்.

  அப்போது அவர் பேஸ்-புக்கையும் பயன்படுத்தி வந்துள்ளார். அதில் அவருக்கு பெண் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது.

  அந்த பெண்ணுடன் அவர் நட்பாக பழக தொடங்கினார். அந்த பெண்ணும் அவருடன் பழகினார்.

  இருவரும் பேஸ்-புக்கில் அதிக நேரம் பேசி வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று சாகர் உரையின் அந்த பெண்ணுடன் வழக்கம் போல பேசி வந்தார். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது.

  இதனால் அந்த பெண், சாகர் உரையினுடன் பேசாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனை நினைத்து சாகர் உரையின் மனவேதனை அடைந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் இதுகுறித்து ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்க வந்து சாகர் உரையினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேஸ்-புக் தோழி தகராறில் ஈடுபட்டதால் வடமாநில வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×