search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரம் அருகே காரில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை:  2 பேர் கைது
    X

    விழுப்புரம் அருகே காரில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை: 2 பேர் கைது

    • விழுப்புரம் அருகே காரில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இவர்களிடமிருந்து லேப்டாப் செல்போன் கார் மற்றும் ஆன்லைன் லாட்டரி சீட்டுகளுக்கான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சமீபகாலமாக புகையிலை பொருள்கள் கடத்தல் மது கடத்தல் லாட்டரி சீட்டு விற்பனை போன்ற பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை தடுக்கும் விதமாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.இவர் எடுக்கும் அதிரடி நடவடிக்கையால் பல்வேறு குற்ற சம்பவங்கள் தடுக்கப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் இவருக்கு பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பூதேவி பகுதியின் சாலை ஓரமாக காரில் ஆன்லைன் மூலம் லாட்டரி 1,2-ம் நம்பர் சீட்டு விற்பனை செய்வதாக விழுப்புரம் மாவட்ட சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிற்கு தகவல் கிடைத்தது.

    தங்களின் பேரில் திண்டிவனம் போலீஸ் ஏ .எஸ்.பி அபிஷே கூப்பிட மேற்பார்வையில் திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு ஒரு காரில் மூதேவி செந்தமிழ் நகரை சேர்ந்த ரஹ்மத்துல்லா (வயது 22) சென்னை அண்ணாநகர் பாடி குப்பம் பகுதியைச் சேர்ந்த பிரவீன் (19) இருவரும் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரியவந்தது. உடனே போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து லேப்டாப் செல்போன் கார் மற்றும் ஆன்லைன் லாட்டரி சீட்டுகளுக்கான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×