என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வானூர் அருகே வீட்டின் முன் நிறுத்திய மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது
  X

  வானூர் அருகே வீட்டின் முன் நிறுத்திய மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வானூர் அருகே வீட்டின் முன் நிறுத்திய மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
  • கண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த சாரதி (வயது 19) என்பதும், ஜெயச்சந்திரனின் மோட்டார் சைக்கிளை திருடியதையும் ஒப்புக்கொண்டார்.

  விழுப்புரம்:

  விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கடப்பேரி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 48). இவர் சேதுராபட்டில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலை முடிந்து விட்டு தனது வீட்டின் முன்னாள் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்கச் சென்றார். மீண்டும் காலை வீட்டில் வெளியே வந்து பார்த்தபோது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

  இது குறித்து ஜெயச்சந்திரன் வானூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் வானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மோட்டார் சைக்கிளை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை அரிகிருஷ்ணன் தலைமை யிலான போலீசார் புதுச்சேரி-மயிலம் ரோடு அருகே ரங்கநாதபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த நபரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார். இதை அடுத்து அவரை மோட்டார் சைக்கிளுடன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கிடுகிபிடி விசாரணை செய்தனர். அதில் கண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த சாரதி (வயது 19) என்பதும், ஜெயச்சந்திரனின் மோட்டார் சைக்கிளை திருடியதையும் ஒப்புக்கொண்டார். உடனே போலீசார் சாரதியை கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து ஜெயச்சந்திரனிடம் ஒப்படைத்தனர்.

  Next Story
  ×