என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
மதிகோன்பாளையம் அருகே வாகனம் மோதி வியாபாரி பலி
- வாகனம் மோதி வியாபாரி பலியானார்.
- சாலையோரம் நின்ற வாகனம் மீது மோதி உயிரிழந்த பரிதாபம்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், இருமத்தூர் அடுத்த வையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது35). இவர் தருமபுரி பஸ் நிலையத்தில் தள்ளுவண்டியில் பழ கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.
திப்பம்பட்டி அடுத்த பன்னிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் (31) ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் தருமபுரி-திருப்பத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மதிகோ ன்பாளையம் அருகே தனியார் பள்ளி அருகே ரோட்டோரத்தில் நின்ற ஒரு வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதியது.
இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. சக்திவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த மதிகோன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியானவரின் உடலை கைப்பற்றி பிரேதத்தை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் காயமடைந்த மனோஜ் குமாரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.