search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரூர் அருகே  ரூ.96.50 கோடி மதிப்பில் 4 வழி சாலை  அமைக்க அடிக்கல் நாட்டு விழா
    X

     அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஆகியோர் சாலை அமைக்க அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். அருகில் கலெக்டர் சாந்தி மற்றும் தடங்கம் சுப்பிரமணி எம்.எல்.ஏ,     எம்.ஜி. சேகர் உள்பட பலர் உள்ளனர்.

    அரூர் அருகே ரூ.96.50 கோடி மதிப்பில் 4 வழி சாலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா

    • அடிக்கல் நாட்டு விழா இன்றுகாலை தீர்த்தமலை அருகேயுள்ள பொய்யபட்டியில் நடந்தது.
    • இருவழி பாதையில் இருந்து 4 வழிப்பாதையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி-அரூர் வழி மொரப்பூர் சாலை வரை இருவழி பாதையில் இருந்து 4 வழிப்பாதையாக அகலப்படுத்த மேம்பாடு செய்யும் பணி ரூ.313.50 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதே போன்று திருவண்ணாமலை-அரூர் வழி தானிப்பாடி சாலை வரை இருவழி பாதையில் இருந்து 4 வழிப்பாதையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணி ரூ.96.50 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இந்த நெடுஞ்சாலை திட்டபணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்றுகாலை தருமபுரி மாவட்டம், அரூர் ஒன்றியம், தீர்த்தமலை அருகேயுள்ள பொய்யபட்டியில் நடந்தது.

    இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். விழாவில் தமிழக பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.

    இதில் தடங்கம் சுப்பிரமணி எம்.எல்.ஏ, எம்.ஜி. சேகர் உள்பட பலர் உள்ளனர்.

    Next Story
    ×