என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நானே வருவேன் திரைப்படம் வெளியீடு: நெல்லையில் 100 அடி உயரத்திற்கு தனுஷ் பேனர்
- நடிகர் தனுஷ் நடித்துள்ள 'நானே வருவேன்' படம் இன்று வெளியானது.
- நெல்லை சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள ஒரு திரையரங்கில் நெல்லை, தென்காசி மாவட்ட தனுஷ் ரசிகர்கள் சார்பில் டி.ஜே இசையுடன் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
நெல்லை:
நடிகர் தனுஷ் நடித்துள்ள 'நானே வருவேன்' படம் இன்று வெளியானது.
நீண்ட இடைவெளிக்கு பின்னர், தன்னுடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் இந்த படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.
ரசிகர்கள் கொண்டாட்டம்
இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரைப்படம் வெளியானது. இதனை ஒட்டி நெல்லை சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள ஒரு திரையரங்கில் நெல்லை, தென்காசி மாவட்ட தனுஷ் ரசிகர்கள் சார்பில் டி.ஜே இசையுடன் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆட்டம், பாட்டம் என கலை கட்டிய முதல் நாள் முதல் காட்சியை காண திரளான ரசிகர்கள் திரையரங்கில் குவிந்தனர். நானே வருவேன் திரைப்படத்தை வரவேற்கும் வகையில் அங்கு 100 அடி உயரத்தில் தனுஷ் பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதற்கு தனுஷ் ரசிகர்கள் தடியங்காய் சுற்றியும் கையில் சூடன் ஏற்றியும் திருஷ்டி கழித்தனர்.
தொடர்ந்து ரசிகர்கள் தனுஷ் பேனர் முன்பு விழுந்து நமஸ்காரம் செய்து ஆட்டம் பாட்டத்தை தொடர்ந்தனர். இதனையொட்டி அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரசிகர் ஒருவர் 100 அடி உயர பேனர் மீது ஏறி பாலாபிஷேகம் செய்தார். உடனே அங்கிருந்த போலீசார் அந்த ரசிகரை கீழே இறங்கச் செய்தனர்.
மேலும் கூடியிருந்த ரசிகர்களை போலீசார் அப்புறப்படுத்தி திரையரங்குக்குள் அனுப்பி வைத்தனர்.