search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல்லில் விவசாய தொழிலாளர் சங்க மாநில குழு கூட்டம்
    X

    நாமக்கல்லில் விவசாய தொழிலாளர் சங்க மாநில குழு கூட்டம்

    • மத்திய அரசு அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை கடுமையாக்கி உள்ளது.
    • வெளிச் சந்தையில் வாங்கும் பொருள்களுக்கும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்க தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநிலக்குழு கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஏ.லாசா் தலைமை வகித்தாா்.

    அகில இந்திய பொதுச் செயலாளா் பி.வெங்கட், மாநில பொதுச் செயலாளா் வீ.அமிா்தலிங்கம், மாநிலப் பொருளாளா் எஸ்.சங்கா், மாநிலச் செயலாளரும், எம்எல்ஏவுமான எம்.சின்னதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    மத்திய அரசு அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை கடுமையாக்கி உள்ளது. இதனால் அனைத்துப்பகுதி மக்களும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனா். பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் உணவுப் பொருள்கள், உள்ளீட்டு, வெளிச் சந்தையில் வாங்கும் பொருள்களுக்கும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில், மாநிலச் செயலாளா்கள் அ.பழனிசாமி, அ.து.கோதண்டம், மாநில துணைத் தலைவா்கள், ஜி.கணபதி.பி.வசந்தாமணி, எஸ்.பூங்கோதை, நாமக்கல் மாவட்டத் தலைவர் சி.துரைசாமி, மாவட்டச் செயலாளர் வி.பி.சபாபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×