என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நாங்குநேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதியதில் கூலித்தொழிலாளி பலி
  X

  நாங்குநேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதியதில் கூலித்தொழிலாளி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கீழூர் 4 வழிச் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது வாகனம் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
  • இதுகுறித்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  நெல்லை:

  நாங்குநேரி பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் மகாராஜன் (வயது55). கூலித் தொழிலாளி. இவர் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள தளபதி சமுத்திரம் கீழூர் 4 வழிச் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

  அப்போது அந்த வழியாக வந்த வாகனம் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மகராஜன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  ஆனால் செல்லும் வழியிலேயே மகாராஜன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×