என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  காயல்பட்டினத்தில் மோட்டார் சைக்கிள் மாயம்
  X

  காயல்பட்டினத்தில் மோட்டார் சைக்கிள் மாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வீட்டின் முன் நிறுத்தியிருந்த அந்த மோட்டார் சைக்கிளை மறுநாள் காலையில் பார்க்கும்போது காணவில்லை.
  • சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  ஆறுமுகநேரி:

  காயல்பட்டினம் கே.டி.எம். தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் காஜா முகைதீன். இவரது மகன் சாதிக் (வயது 25).சென்னையில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலை பார்த்து வந்தார்.பக்ரீத் விடுமுறையில் காயல்பட்டினத்திற்கு வந்த இவர் தனது நண்பரான குதுத்தின் என்பவரிடம் அவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வாங்கி பயன்படுத்தி வந்தார்.

  சம்பவத்தன்று இரவு தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த அந்த மோட்டார் சைக்கிளை மறுநாள் காலையில் பார்க்கும்போது காணவில்லை. அதனை யாரோ திருடி சென்றது தெரியவந்தது. இது பற்றி சாதிக் நேற்று ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அமலோற்பவம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  Next Story
  ×