என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  களக்காடு அருகே மோட்டார் சைக்கிள் உடைப்பு; பெண்ணுக்கு கொலை மிரட்டல்- அக்காள்-தங்கைக்கு வலை வீச்சு
  X

  களக்காடு அருகே மோட்டார் சைக்கிள் உடைப்பு; பெண்ணுக்கு கொலை மிரட்டல்- அக்காள்-தங்கைக்கு வலை வீச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பொதுபாதையை பயன் படுத்துவது தொடர்பாக முத்துப்பாண்டிக்கும், ராஜலெட்சுமிக்கும் தகராறு இருந்து வருகிறது.
  • ராஜலெட்சுமியும், ராணியும் மோட்டார் சைக்கிளை உடைத்து சேதப்படுத்தினர்.

  களக்காடு:

  களக்காடு அருகே உள்ள சீவலப்பேரி தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் அப்பகுதியில் ஓட்டல் வைத்துள்ளார். இவரது மனைவி ராஜம்மாள் (வயது 50) இவருக்கு உதவியாக ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.

  இவர்கள் அதே தெருவை சேர்ந்த ராணி என்பவரது வீட்டு முன் உள்ள பொதுபாதை வழியாக தங்களது வீட்டிற்கு சென்று வருவது வழக்கம். இந்த பொதுபாதையை பயன் படுத்துவது தொடர்பாக முத்துப்பாண்டிக்கும், ராணியின் தங்கை ராஜலெட்சுமிக்கும் தகராறு இருந்து வருகிறது.

  சம்பவத்தன்றும் இதுசம்பந்தமாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து முத்துப்பாண்டி குடும்பத்தினர் களக்காடு போலீசில் புகார் அளித்தனர்.

  இதனால் ஆத்திரம் அடைந்த ராஜலெட்சுமியும், ராணியும், முத்துப்பாண்டி வீட்டு அருகே நிறுத்தப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிளை உடைத்து சேதப்படுத்தினர்.

  இதைப்பார்த்த ராஜம்மாள் அவர்களை தட்டிக் கேட்டார். இதையடுத்து ராஜலெட்சுமியும், ராணியும் ராஜம்மாளை கூலிப்படை ஏவி கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர்.

  இதுபற்றி ராஜம்மாள் களக்காடு போலீசில் புகார் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ராஜலெட்சுமி, ராணி ஆகியோரை தேடி வருகிறார்.

  Next Story
  ×