search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்தி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி கூலித் தொழிலாளி பலி
    X

    பரமத்தி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி கூலித் தொழிலாளி பலி

    பரமத்தி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி பலியானார்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் தாலுகா, பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் முருகேசன் (63) கூலித்தொழிலாளி. இவர் நேற்று நாமக்கல்லில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அவரது உறவினர் விஜயகுமார் என்பவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பரமத்திவேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    பாண்டமங்கலம் அருகே உள்ள கோப்பணம்பாளையம் பகுதியில் சென்ற போது மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற விஜயகுமார் அப்பகுதியில் இருந்த வேகத்தடையில்‌ ஏறி இறங்க முயன்றார். அப்போது பின்னால் வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் முருகேசன் கீழே விழுந்ததில் பின்னால் வந்த கார் அவர்மீது ஏறியது. படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அவ்வழியாக வந்தவர்கள் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே முருகேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் முருகேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×