search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவிலில் குழாயில் வீணாகும் குடிநீரை தடுக்க நடவடிக்கை-சேர்மன் நேரில் ஆய்வு
    X

    சங்கரன்கோவிலில் குடிநீர் குழாய் பாதிக்கப்பட்டு தண்ணீர் வீணாகும் இடத்தில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி ஆய்வு செய்த காட்சி.

    சங்கரன்கோவிலில் குழாயில் வீணாகும் குடிநீரை தடுக்க நடவடிக்கை-சேர்மன் நேரில் ஆய்வு

    • குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் 3 நாட்களுக்குள் இதை சரி செய்வதாக உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
    • குடிநீர் வீணாகும் குழாயை சரி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளும் போது நகர்ப்பகுதியில் மூன்று நாட்களுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக நகராட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில்- ராஜபாளையம் சாலையில் தலைமை தபால் நிலையம் அருகே ஒரு வருடத்திற்கும் மேலாக மெயின் குழாயில் பாதிப்பு ஏற்பட்டு குடிநீர் திறந்து விடும் நேரங்களில் எல்லாம் அதில் அந்த குழாயில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறும் சூழ்நிலை நிலவி வருகின்றது. இது குறித்து பலமுறை குடிநீர் வடிகால் அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் இந்த வீணாகும் குடிநீர் குழாயை சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் நேரில் சென்று ஆய்வு நடத்தி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம், பல மாதங்களாக குழாயில் வீணாகும் குடிநீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    அதனை தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் 3 நாட்களுக்குள் இதை சரி செய்வதாக உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த குழாய் மெயின் பகுதியில் அமைந்துள்ளதால் இந்த பகுதியில் உள்ள இந்த குடிநீர் வீணாகும் குழாயை சரி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளும் போது நகர்ப்பகுதியில் மூன்று நாட்களுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக நகராட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் இதை சரி செய்யும் பட்சத்தில் தண்ணீர் திறந்து விடும் போது குடிநீர் வீணாகாமல் தண்ணீர் திறந்துவிடும் இடங்களுக்கு முழு அளவில் தண்ணீர் கிடைக்கும் எனவும் தெரிவித்தனர்.

    Next Story
    ×