என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பொம்மிடி அருகே வீட்டின் கதவை உடைத்து திருடிய முகமூடி கொள்ளையர்கள்
  X

  பொம்மிடி அருகே வீட்டின் கதவை உடைத்து திருடிய முகமூடி கொள்ளையர்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வீட்டின் பக்கவாட்டு கதவில் உள்ள பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.
  • 7பவுன் நகை, ரூ.10,000 பணத்தை திருடிச்சென்றதாக கூறப்படுகிறது.

  பாப்பிரெட்டிப்பட்டி,

  தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகேயுள்ள எஸ்.பாளையம் வன சாலை பகுதியில் கோட்டைமேடு என்ற பகுதி உள்ளது.

  இங்கு செல்வம் என்ற விவசாயி சுமார் 10 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.சுற்றி வயல் வெளி உள்ள நிலையில் நடுவே வீட்டை கட்டியுள்ளார்.இவரது மகன் சத்தியராஜ்.இவர் வெளியூரில் வசித்து வருகிறார்.

  வீட்டில் செல்வமும், அவரது மாமியார் 90 வயதான பெருமாயி என்பவரும் மட்டுமே உள்ளனர்.நேற்று இரவு இருவரும் தூங்கி கொண்டிருந்துள்ளனர்.

  நள்ளிரவு 1 மணி அளவில் 3 முகமூடி அணிந்த மர்ம ஆசாமிகள் வீட்டின் பக்கவாட்டு கதவில் உள்ள பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். ஒரு அறைக்குள் இருந்த பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 7பவுன் நகை, ரூ.10,000 பணத்தை திருடிச்சென்றதாக கூறப்படுகிறது.

  கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதே வீட்டில் கொள்ளையர்கள் புகுந்து திருடமுயன்றதாகவும் கதவை உடைக்க முடியாததாலும், வீட்டில் இருந்தவர்கள் சத்தம் போட்டதாலும் அவர்கள் ஓட்டம் பிடித்து விட்டதாக கூறப்படுகிறது.

  இந்த கொள்ளை சம்பவம் பற்றி டி.எஸ்.பி.புகழேந்தி மற்றும் பொம்மிடி போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

  தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட ஆசாமிகள் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  முகமூடி கொள்ளை யர்கள் விவசாயி வீட்டில் கைவரிசை காட்டியுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Next Story
  ×