search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செம்பட்டியில் கந்துவட்டி வழக்கில் ஒருவர் கைது
    X

    கோப்பு படம்

    செம்பட்டியில் கந்துவட்டி வழக்கில் ஒருவர் கைது

    • கந்துவட்டி கேட்டு தகராறில் ஈடுபட்ட நபர் மீது போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
    • கந்து வட்டி சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம், சேடபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் அய்யாதுரை (53) இவர், சேடபட்டியில் வாழைப் பழக்கடை வைத்துள்ளார்.

    தன்னுடைய வாழைப்பழக்கடையை விரிவுபடுத்துவதற்காக கடந்த 2019-ம் ஆண்டு சேடபட்டி கணபதிபட்டி தெருவைச் சேர்ந்த ரத்தினசாமி (65) என்பவரிடம் மோட்டார் சைக்கிள் உரிமம் புத்தகத்தைக் கொடுத்து ரூ.20 ஆயிரம் கடன் பெற்றிருந்தார்.

    இந்நிலையில், இதுவரை வாங்கிய தொகை மற்றும் வட்டி சேர்த்து ரூ.27 ஆயிரம் செலுத்தி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால், வட்டிக்கு பணம் கொடுத்த ரத்தினசாமி என்பவர், மேலும், தனக்கு ரூ.20 ஆயிரம் கொடுத்தால் தான் உன்னுடைய மோட்டார் சைக்கிள் உரிமம் புக்கை கொடுப்பேன் என தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அய்யாதுரை செம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    இந்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த செம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் கந்து வட்டி சட்டத்தின்கீழ் ரத்தினசாமி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கந்துவட்டி சட்டத்தில் செம்பட்டி பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×