search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காடு ஏ.எஸ்.ஏ. சந்தையில் மலேசிய நிறுவனம் ஆய்வு
    X

    மலேசிய நிறுவனம் சார்பில் ஆய்வு நடைபெற்ற காட்சி. 

    களக்காடு ஏ.எஸ்.ஏ. சந்தையில் மலேசிய நிறுவனம் ஆய்வு

    • சந்தையில் விவசாயிகள் தங்களுடைய விளை பொருட்களை நேரடியாக விற்பனை செய்து வருவதால் பொதுமக்களுக்கு தரமான காய்கனிகள் குறைந்த விலைக்கு கிடைக்கின்றன.
    • இங்குள்ள விவசாயிகளிடம் காய்,கனி களை நேரடியாக கொள்முதல் செய்து மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு வருகிறது.

    ஏர்வாடி:

    களக்காட்டில் ஏ.எஸ்.ஏ. என்ற தனியார் நிறுவனம் சார்பில் காய்கனி சந்தை இயங்கி வருகிறது. இந்த சந்தை வாரம் இருமுறை திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் இயங்கி வருகிறது. இந்த சந்தையை களக்காடு சுற்று வட்டார மக்கள் மட்டுமின்றி நாங்குநேரி, சேரன்மகாதேவி சுற்றுவட்டார மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சந்தையில் விவசாயிகள் தங்களுடைய விளை பொருட்களை நேரடியாக விற்பனை செய்து வருவதால் பொதுமக்களுக்கு தரமான காய்கனிகள் குறைந்த விலைக்கு கிடைக்கின்றன. இந்நிலையில் மலேசியாவின் பாரத் குரூப்ஸ் நிறுவனத்தை சேர்ந்த குழுவினர் இந்த சந்தையை ஆய்வு செய்தனர்.

    அதனடிப்படையில் இங்குள்ள விவசாயிகளிடம் காய்,கனி களை நேரடியாக கொள்முதல் செய்து மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு வருகிறது. ஏற்றுமதி செய்வதற்கான கட்ட மைப்புகளையும் அந்நிறுவனம் செய்துவருகிறது. இந்த ஏற்றுமதி திட்டம் நடைமுறைக்கு வந்தால் அப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர வாய்ப்பு உள்ளதாக சந்தையின் நிர்வாக இயக்குநர் ஏ.எஸ்.ஏ. கருணாகரன் தெரிவித்தார். சந்தையின் சார்பு நிறுவனமாக அருண் புட்ஸ் பிராடக்ட்ஸ், ஏ.எஸ்.ஏ. ரெசிடென்சி இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×