என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கார் மோதி வாலிபர் பலி
  X

  கார் மோதி வாலிபர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கார் மோதி வாலிபர் பலியானார்.
  • பெட்ரோல் பங்கில் பெட்ரோலை நிரப்பி விட்டு தனது பைக்கை இடது பக்க சாலை ஓரம் உருட்டி கொண்டு வந்தார்.

  மேலூர்

  மதுரை மாவட்டம் மேலூர் நகர் சொக்கம்பட்டியைச் சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகன் ராமர் (வயது21). ராணுவ பணியில் சேர்வதற்காக பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

  இன்று அதிகாலை ராமர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார். மேலூர்- மலம்பட்டி 4 வழிச்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோலை நிரப்பி விட்டு தனது பைக்கை இடது பக்க சாலை ஓரம் உருட்டி கொண்டு வந்தார்.

  அப்போது மதுரையில் இருந்து மேல பூங்குடி சென்ற கார் அதிவேகமாக இவரது பின்பகுதியில் மோதியது. இதில் ராமர் தூக்கி எறிய ப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் நிலைதடுமாறி 4 வழிச்சாலையின் சென்டர் மீடியினில் ஏறி நின்றது.

  இதுபற்றிய தகவல் அறிந்த மேலூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ், தனிப்பிரிவு ஏட்டு தினேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராமரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலூர் சுங்கச்சாவடி விபத்து மீட்பு வாகன அலுவலர் கார்த்திகேயன், ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். அதிவேகமாக காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய டிரைவர் மதுரை சூர்யா நகரை சேர்ந்த முரளி என்பவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

  Next Story
  ×