search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்
    X

    மழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

    • மதுரையில் மாலை நேர மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
    • பழுதான ரோடுகளில் செல்வதில் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வந்தனர்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் தினமும் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கி றது. ஆனால் மாலை நேரங்களில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்து அதிரடி காட்டி வருகிறது. வழிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நேற்று மாலையும் கனமழை கொட்டியது.

    இதன் காரணமாக முக்கிய சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பெரியார் பஸ் நிலையம், காளவாசல், பழங்காநத்தம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டன.

    காளவாசல்-தேனி பிரதான சாலையில் ஒவ்வொரு முறை மழை பெய்யும்ேபாதும் குளம்போல் மழைநீர் தேங்கி விடுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அந்த பகுதியில் மழை வெள்ளம் வடிய தேவையான வசதிகளை செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    மதுரை மாநகரில் மழையில் பலசாலைகள் சேதமாகி குண்டும், குழியுமாக உள்ளன. சேதமடைந்த சாலைகள் மற்றும் வீதிகளில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் வாகனங்களில் செல்ல முடியாமல் அவதிபட்டனர். சிலர் வாகனங்களுடன் மழைநீரில் விழுந்து எழுந்து சென்றனர்.

    மதுரை நகர் பகுதிகளில் பி.பி.குளம் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படு கிறது. இதில் மழை நீரும் தேங்குவதால் மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த சாலை களை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் மதுரை மாநகராட்சி விரிவாக்க பகுதிகளான திருப்பரங்குன்றம் அவனியாபுரம், பெருங்குடி ஆனையூர், பார்க் டவுன், கோசாக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாததால் பல்வேறு வீதிகளில் குண்டும் குழியும், சேறும் சகதியும் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் வீதிகளில் நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லவும் முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    எனவே இந்த பணிகளையும் விரைவுபடுத்தி உடனடியாக சாலைகளை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×