search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் கேள்வி?
    X

    அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு தீர்மான புத்தகத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் கேள்வி?

    • அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விளக்கம் தராதது ஏன்? என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
    • தி.மு.க. தொண்டர்களே தி.மு.க. மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.

    மதுரை

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் திருவேடகத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு தீர்மானம் புத்தகம் வழங்கும் விழா மற்றும் டிஜிட்டல் திண்ணைப் பிரசாரம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசிய தாவது-

    சென்னையில் நடந்த தி.மு.க. திராவிட மாடல் பயிற்சியின் போது பேசிய உதயநிதி பிரதமர் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் எப்படி பேசினார் அது தான் திராவிட மாடல் ஆட்சி என்று கூறுகிறார். அந்த நிகழ்ச்சியில் தி.மு.க.வினரை வைத்து மு.க.ஸ்டாலின் பேசும்போது கைதட்டுவது தான் மாடலா, அரசு விழாவில் தி.மு.க. காரர்களுக்கு கை தட்ட பயிற்சி கொடுப்பதுதான் திராவிட மாடலா?.

    மு.க.ஸ்டாலினுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது என்ற மாயதோற்றத்தை உருவாக்க ஒரு போலி நாடகத்தை அந்த விழாவில் அரங்கேற்றியுள்ளனர். தற்போது திராவிட மாடல் பயிற்சி என்பது உதயநிதியை முன்னிலைப்படுத்தும் பயிற்சியாகும்.

    பெரியாருக்கு முன் ஐம்பெரும் தலைவர்களான அயோத்திதாசர், பி.டி. தியாகராஜர், நடேசனார், பனகல் அரசர் உள்ளிட்டோர் 100 ஆண்டுக்கு முன்பாக திராவிட விளக்கம் அளித்துள்ளனர். தற்போது திராவிட மாடல் பயிற்சி என்பது ஏமாற்று வேலை. ஐம்பெரும் தலைவர்கள், மற்றும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் தங்கள் வாரிசுகளை நியமிக்கவில்லை.

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தற்போது தி.மு.க. மீது 2 ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். ஆனால் இதுவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் சொல்ல முன்வரவில்லை ஏன்?தி.மு.க. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சியா கும். இந்த அரசின் மீது மக்கள் கடுமையான வெறுப்பில் உள்ளனர். எப்போது அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்று மக்கள் எதிர்பார்க்கும் நிலை உள்ளது. அதுமட்டுமல்லாது தி.மு.க. தொண்டர்களே தி.மு.க. மீது அதிருப்தி அடைந்துள்ளனர். தி.மு.க.விற்கு ஊழலை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர் கெட்டுள்ளது. தமிழகத்தை இந்தியாவிலேயே முதல் இடத்திற்கு கொண்டு செல்வேன் என்று முதலமைச்சர் கூறுகிறார். அவர் சொல்கிறபடி சட்ட ஒழுங்கு சீர்கேட்டில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதா? என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

    கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தி.மு.க.விற்கு எதிராக எந்த கேள்வியும் கேட்க தயாராக இல்லை. தமிழக அரசு பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று போராட்ட மும் செய்ய தயாராக இல்லை. தி.மு.க.வின் திராவிட மாடல் மக்களை ஏமாற்றுவதுதான்.

    அ.தி.மு.க. செய்த சாதனை திட்டங்களையும் தி.மு.க.வின் மக்கள் விரோத செயல்களையும் டிஜிட்டல் திண்ணைப் பிரசாரம் மூலம் மக்களுக்கு தொடர்ந்து கிராமந்தோறும் எடுத்து நாம் கூறுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×