search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீசார்  அபராதம் வசூலிப்பதில் சிக்கல்
    X

    போலீசார் அபராதம் வசூலிப்பதில் சிக்கல்

    • வாகன ஓட்டிகளிடம் போலீசார் அபராதம் வசூலிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    • இப்போது அவர்களுக்கு அபராத வசூல் சீட்டு தரப்படவில்லை.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 32 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

    இதனை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோருக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    எனவே மதுரையில் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக இயங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக "மதுரை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் சுற்றி திரிபவர்களுக்கு 500 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்படும்" என்று மாவட்ட கலெக்டர் அனீஸ்சேகர் சமீபத்தில் அறிவித்து இருந்தார். இதற்காக மதுரையின் 5 மண்டலங்களிலும், 15 குழுவினர் அதிரடி அபராத வசூல் வேட்டையில் ஈடு பட்டு வருகின்றனர்.

    மதுரை மாநகரில் நேற்று மட்டும் முகக்கவசம் அணியாமல் சுற்றித் திரிந்த தாக 100 பேரிடம் 32,400 ரூபாய் அபராதம் வசூலிக்க ப்பட்டு உள்ளது.அதேபோல தனியார் நிறுவனங்களில் முகக்கவசம் மற்றும் கொரோனா விதி முறை களை கடைபிடிக்க தவறியதாக 62 நிறுவனங்களைச் சேர்ந்தவர்களிடம் ரூ.21,300 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

    மதுரை மாவட்டத்திலும் வருவாய்த்துறை அதி காரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து, முகக்கவசம் அணியாதவரிடம் அபராதம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்தில் இன்று காலை 12 மணி நேர நிலவரப்படி, சுமார் 50 பேரிடம் முகக்கவச அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக தெரிய வந்து உள்ளது.

    மதுரை மாநகரில் போக்குவரத்து போலீசார் முன்பு முகக்கவசம் அணியாமல் திரியும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதித்து வந்தனர். ஆனால் இப்போது அவர்களுக்கு அபராத வசூல் சீட்டு தரப்படவில்லை. எனவே அவர்கள் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இருந்த போதிலும் போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளிடம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

    Next Story
    ×