search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வைகை ஆற்றங்கரையில் தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்
    X

    வைகை ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தபோது எடுத்த படம்.

    வைகை ஆற்றங்கரையில் தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்

    • ஆடி அமாவாசை தினமான இன்று வைகை ஆற்றங்கரையில் பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனார்.
    • மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன.

    மதுரை

    தமிழ் மாதத்தின்படி இன்று ஆடி அமாவாசை தினமாகும். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் சஞ்சரிக்கும் தினம். இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து குலதெய்வத்தை வழிபடுவதும், அம்மன் வழிபாடு நடத்துவதும் மிகுந்த புண்ணியம் தரும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

    பொதுவாக அமாவா சைக்குப் பின் பெளர்ணமி வரை வளர்பிறை சுக்ல பட்சம். அப்போது சுப காரியங்களையும் செய்யலாம்.

    ஆடி அமாவா சையை முன்னிட்டு இன்று வைகை ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதலே திரண்டனர். அங்கு அவர்கள் புரோகிதர்கள் முன்னிலையில் எள்ளும் தண்ணீரும் இறைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    மதுரை மாநகரில் ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், ரிசர்வ் லைன் மாரியம்மன் கோவில், ஜெய்ஹிந்த்புரம் வீரகாளி அம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன. அங்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவில்களுக்கு முன்பு நின்ற பசுக்களுக்கு அகத்திக்கீரைகளை வழங்கினர்.

    இதனைத் தொடர்ந்து வீடுகளில் சாமி படங்களுக்கு முன்பாக புத்தாடைகள் வைத்து அறுசுவை படையல் இட்டு, இறைவழிபாடு நடத்தப்பட்டது. அதன் பிறகு காகங்களுக்கு உணவுகள் படைத்து பொதுமக்கள் குடும்பத்துடன் ஒன்றாக சாப்பிட்டனர்.

    மதுரை மாவட்டத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு மாநகர்- மாவட்டத்தில் உள்ள பல அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    Next Story
    ×