search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.10 லட்சம் இழப்பீடு கேட்டு பா.ஜனதா பிரமுகருக்கு நோட்டீசு
    X

    ரூ.10 லட்சம் இழப்பீடு கேட்டு பா.ஜனதா பிரமுகருக்கு நோட்டீசு

    • பொதுப்பாதையை ஆக்கிரமித்ததாக கூறி ரூ.10 லட்சம் இழப்பீடு கேட்டு பா.ஜனதா பிரமுகருக்கு மதுரை துணைமேயர் நோட்டீசு அனுப்பினார்.
    • இவர் மீது மதுரை விளாங்குடியை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் சிவாஜி மாவட்ட கலெக்டரிடம் ஒரு புகார்மனு அளித்தார்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன். இவர் ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இவர் மீது மதுரை விளாங்குடியை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் சிவாஜி மாவட்ட கலெக்டரிடம் ஒரு புகார்மனு அளித்தார்.

    அதில் ஜெய்ஹிந்துபுரத்தில் பொதுப்பாதையை ஆக்கிரமித்து துணை மேயர் நாகராஜன் வீடு கட்டியிருப்பதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இது அரசியல் ரீதியாக என் மீது சுமத்தப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டு என்று மறுத்துள்ள துணை மேயர் நாகராஜன், இது தொடர்பாக அவரது வக்கீல்கள் மூலம் பா.ஜ.க. பிரமுகர் சிவாஜிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது-

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் மாநகராட்சி 80-வது வார்டில் எனது சிறப்பான செயல்பாடுகள் மூலம் பொதுமக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ளேன். கவுன்சில ராகவும், துணை மேயரா கவும் இருந்து வரும் என் மீது அரசியல் எதிரிகள் சிலரின் தூண்டுதல் காரணமாக தாங்கள் எனது பெயரையும் புகழையும் கெடுக்கும் நோக்கில் நான் அதிகார துஷ்பிரயோகம் செய்து பொதுபாதையை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளதாக ஒரு பொய்யான பிரச்சாரத்தை செய்து வருகிறீர்கள்.

    இந்த குற்றச்சாட்டு காரணமாக தாங்க முடியாத மன வருத்தமும் அவமான மும் ஏற்பட்டுள்ளது. தாங்கள் செய்த இந்த செயல் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 499, 500 மற்றும் 120 (பி) ஆகிய பிரிவுகளில் தண்டனைக்குரிய செயலா கும்.

    எனவே இந்த சட்ட விரோத செயலால் எனக்கு ஏற்பட்டுள்ள அசிங்கத்திற்கும் அவமா னத்திற்கும் இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். மேலும் நேரில் சந்தித்து நிபந்தனை யற்ற எழுத்துப்பூர்வமான மன்னிப்பையும் பெற வேண்டும். தவறும் பட்சத்தில் தங்கள் மீது சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×