search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முத்தையாசாமி-அய்யனார்சாமி கோவில் கும்பாபிஷேகம்
    X

    முத்தையாசாமி-அய்யனார்சாமி கோவில் கும்பாபிஷேகம்

    • முத்தையாசாமி-அய்யனார்சாமி கோவில் கும்பாபிஷேகம் வருகிற 11-ந் தேதி நடக்கிறது.
    • கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 2 நாட்க ளாக கோவிலில் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்து வருகின்றன.

    மதுரை

    மதுைர மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடகரை கிராமத்தில் முத்தையாசாமி- அய்யனார் சாமி கோவில் உள்ளது. இந்த பகுதியில் பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு விசேஷ நாட்களில் பக்தர்கள் திரண்டு வந்த சாமி தரிசனம் செய்வார்கள்.

    கோவில் திருவிழா வின்போது சுற்று வட்டார கிராம மக்கள் ஏராள மானோர் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவதுண்டு. இந்த கோவிலில் கும்பாபி ஷேகம் நடத்த நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டு அதற்கான புனரமைப்பு பணிகள் நடந்தன.

    அந்த பணிகள் முடி வடைந்த நிலையில் முத்தை யாசாமி- அய்யனார் சாமி கோவில் கும்பாபிஷேகம் வருகிற 11-ந்தேதி (திங்கட்கி ழமை) நடைபெற உள்ளது. அன்று காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்துகின்றனர்.

    இந்த விழாவில் டாக்டர் அய்யம்பெருமாள், ஜெய பிரகாஷ், மோகன், வடகரை செல்வராஜ் (பெரியபூசாரி), தொழில் அதிபர் குமார், மணிநகரம் ராஜாமணி, பங்காளிகள், கிராம கமிட்டியாளர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 2 நாட்க ளாக கோவிலில் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்து வருகின்றன.

    Next Story
    ×