என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பச்சிளம் குழந்தை கொலை: தாய்க்கு உதவியது யார்?
- பச்சிளம் குழந்தையை கொன்ற தாய்க்கு உதவியது யார் என்று போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.
- குழந்தையின் தாய் சித்ரா முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்து வந்தார்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் மகாராஜன்.இவரது மனைவி சித்ரா இவர்களுக்கு ஏற்கனவே 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் அவர்களுக்கு 3-வதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு யாழ் இசை வேந்தன் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தனர்.
அந்த குழந்தை பிறந்து 38 நாட்களே ஆன நிலையில் கடந்த 15-ந் தேதி மர்மமான முறையில் இறந்தது. வீட்டில் தொட்டிலில் போடப்பட்டிருந்த குழந்தை பக்கத்து வீட்டு மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் பிணமாக கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
குழந்தையின் தாய் சித்ரா முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவித்து வந்தார். இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இதில் குழந்தைக்கு மூச்சிரைப்பு ஏற்பட்டு வந்ததால் அதனை கவனிக்க முடியாமல் சித்ரா தனது குழந்தையை குடிநீர் தொட்டியில் போட்டு கொலை செய்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து சித்ராவை போலீசார் கைது செய்தனர். இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.