என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கஞ்சா கும்பல் கைது: 15 கிலோ கஞ்சா-வாகனங்கள் பறிமுதல்
  X

  கஞ்சா கும்பல் கைது: 15 கிலோ கஞ்சா-வாகனங்கள் பறிமுதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கஞ்சா கும்பல் கைது செய்யப்பட்டனர்.
  • 15 கிலோ கஞ்சா-வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

  மதுரை

  மதுரை மாடக்குளம் கண்மாய் மாடக்கருப்பு கோவில் அருகே 3 பேர் கும்பல் கஞ்சா விற்பதாக எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  இதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அங்கு பதுங்கி இருந்த 3 பேரை பிடித்தனர். அப்போது அவர்களிடம் 1 கிலோ 20 கிராம் கஞ்சா இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

  பின்னர் 3 பேரையும் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் உசிலம்பட்டியை அடுத்த வி.பேயம்பட்டி, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்தி ரன் (வயது 41), காளவாசல் பட்டறை லைன், ரஞ்சித்குமார் (37), கீரைத்துறை, மேலத்தோப்பு திருச்செல்வம் ( 36) என்பது தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

  மதுரை விளாங்குடி, பரவை மார்க்கெட் அடுக்கு மாடி குடியிருப்பு அருகே 5 பேர் கும்பல் கஞ்சா விற்பதாக கூடல்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 5 பேர் பதுங்கி இருந்தனர்.

  அவர்கள் போலீசார் கண்டதும் தப்பி ஓட முயன்றனர். 4 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவர்களிடம் 14 கிலோ 8 கிராம் கஞ்சா, ரூ.500 ரொக்கம், ஆட்டோ மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

  இதனை தொடர்ந்து மேற்கண்ட 4 பேரையும் போலீசார் போலீஸ் நிலை யத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.

  இதில் அவர்கள் மதுரை, திருவாலவாயநல்லூர் கணேசன் (30), பாரதிபுரம் தெரு சுந்தரம் (35), விளாங்குடி, காளியம்மன் கோவில் தெரு அஸ்வின் (25), சமயநல்லூர், அய்யனார் கோவில் தெரு மோகன்ராஜ் (29) என்பது தெரிய வந்தது. அவர்கள் 4 பேரையும் கூடல் புதூர் போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய குரு தனபால சிங் என்பவரை தேடி வருகின்றனர்.

  Next Story
  ×