என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வெள்ள அபாய எச்சரிக்கை
  X

  மதுரை வைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும் காட்சி.

  வெள்ள அபாய எச்சரிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை ஆற்றங்கரைேயார மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • ஆடு-மாடு உள்ளிட்ட கால்நடைகளை வைகை ஆற்றில் இறங்க அனுமதிக்க வேண்டாம்.

  மதுரை

  தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 71 அடி உயர வைகை அணையில் 70 அடி என்ற அளவில் தண்ணீர் நிரம்பி உள்ளது. வைகை ஆற்றுக்கு உபரியாக வரும் தண்ணீர், அப்படியே ஆற்றுக்குள் திறந்து விடப்படுகிறது.

  சில நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மதுரை, ராமநாதபுரம் உள்பட 5 மாவட்டங்களில், வைகை ஆற்றங்கரையோர பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

  மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் பருவமழை படிப்படியாக குறைய தொடங்கியது. வைகை ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி அடியாக குறைந்தது.

  இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. வைகை அணை ஏற்கனவே 70 அடியை தொட்டுவிட்டதால், பெருமளவில் உபரி நீரை திறந்து விடுவது என்று பொதுப்பணித்துறை முடிவு செய்தது. அதன்படி வைகை ஆற்றில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி என்ற அளவில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

  இதனால் வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டு உள்ளது. இது குறித்து மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  வைகை அணையில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி அளவு தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. எனவே வைகை கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் கூடுதல் கவனம், பாதுகாப்புடன் இருக்க வேண்டும். வைகை ஆற்றில் இறங்குவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். ஆடு-மாடு உள்ளிட்ட கால்நடைகளை வைகை ஆற்றில் இறங்க அனுமதிக்க வேண்டாம்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

  Next Story
  ×