search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வு

    • சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடந்தது.
    • அவர்களுக்கு இன்னொரு நாளில் உடல் தகுதி தேர்வு நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    மதுரை:

    தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடப்பு ஆண்டுக்கான நேரடி சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு முதல் கட்டமாக எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இதில் 525 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் 436 பேர் நேரடியாகவும், 89 பேர் துறை ரீதியாகவும் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர்.

    உடற்தகுதி தேர்வு

    இந்த நிலையில் முதல் கட்ட தேர்வில் வெற்றி வெற்றி பெற்றவர்களுக்கு, 2-ம் கட்டமாக உடல் தகுதி தேர்வு நடத்துவது என்று சீருடை பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்தது.

    அதன்படி மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இன்றும், நாளையும் உடல் தகுதி தேர்வு நடக்கிறது. இதற்காக விண்ணப்பதாரர்கள் காலை 6 மணிக்குள் வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    அதன்படி முதல் நாளான இன்று அதிகாலை முதலே தேர்ச்சி பெற்றவர்கள் ஆயுதப்படை மைதானத்தில் குவிந்தனர். விண்ணப்பதாரர்களிடம் தேர்வாணையத்தால் வழங்கப்பட்ட அழைப்பாணை, அசல் சான்றிதழ்கள், அசல் சான்றிதழின் 2 நகல்கள், போட்டோ உடன் கூடிய அசல் உண்மைச்சான்றிதழ் ஆகியவை சோதனை செய்து உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து உடல் தகுதி தேர்வு நடந்தது.

    உயரம்-ஓட்டம்

    முதல் கட்டமாக, உயரம் மற்றும் மார்பு அளவு அளத்தல், 1500 மீ. ஒட்டம் ஆகியவை நடத்தப்பட்டது.இதனை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் நேரடியாக ஆய்வு செய்தார். நாளை (24-ந் தேதி) 2-ம் கட்டமாக கயிறு ஏறுதல், உயரம் தாண்டுதல் (அல்லது) நீளம் தாண்டுதல், 100 மீட்டர் (அல்லது) 400 மீட்டர் ஓட்டம் ஆகியவை நடத்தப்பட உள்ளது.

    முன்னாள் ராணுவ வீரர்களிடம் 3 ஆண்டுக்குள் படையில் இருந்து விலகிய ஆவணம், பணியில் உள்ளவர்களிடம், ஓராண்டிற்குள் பணியில் இருந்து விடுவிப்பு கோரிய சான்றிதழ் ஆகியவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு இன்று முதல்நாளில் 1500 மீ. ஒட்டம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாளை குண்டு எறிதல், உயரம் தாண்டுதல் (அல்லது) நீளம் தாண்டுதல், 100 மீட்டர் (அல்லது) 400 மீட்டர் ஓட்டம் ஆகியவை நடத்தப்பட உள்ளது.

    கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள், கோரிக்கை மனு மற்றும் அசல் சான்றிதழ்களுடன் வந்து இருந்தனர். அவர்களுக்கு இன்னொரு நாளில் உடல் தகுதி தேர்வு நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×