search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் வாழ்த்து
    X

    ஸ்ரீஹரிகோட்டாவிற்கு சென்று வந்த மாணவிகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பாராட்டினார்.

    பள்ளி மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் வாழ்த்து

    • செயற்கை கோளுக்கு மென்பொருள் தயாரித்து திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனர்.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மாணவிகளை வாழ்த்தினார்.

    திருமங்கலம்

    75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்ரோ சார்பில் எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் புதிய செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட்டின் மூலம் செலுத்தப்பட்ட ஆசாதி சாட் எனப்படும் செயற்கை கோளை தயாரிக்க நாடு முழுவதும் 75 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு பள்ளியிலும் 10 மாணவிகளைக் கொண்டு செயற்கைக்கோள் மென்பொருள்களை தயாரிப்பதற்காக இஸ்ரோ தேர்வு செய்தது.

    இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 11-ம் வகுப்பு மாணவிகள் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு செயற்கை கோளுக்கான மென்பொருள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டதால் அவர்கள் ஸ்ரீஹரிகோட்டா சென்று வந்தனர்.

    முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்து மாணவிகளை பாராட்டினார். இதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் பாராட்டினர்.

    மேலும் ஒன்றிய அளவில் செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளையும் பாராட்டினார்.

    இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாநில நிர்வாகிகள் தன்ராஜ், சிவசுப்பிரமணி, மாவட்ட சார்புஅணி நிர்வாகிகள் சரவணபாண்டி, மகேந்திரபாண்டி, சிங்கராஜ் பாண்டியன், வாகைகுளம் சிவசக்தி, மாவட்ட நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் தமிழ்ச்செல்வம், திருப்பதி, ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் அன்பழகன், நிர்வாகிகள் ஆண்டிச்சாமி, காசி, விஜி, தலைமை ஆசிரியர் கர்ணன், ஆசிரியைகள் சந்தியா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஸ்ரீதேவி சண்முகபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×