என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
  X

  மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மின் கட்டண உயர்வை கண்டித்து சிம்னி விளக்குகள் ஏந்தி எஸ்.டி.பி.ஐ. ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • மதுரை வடக்கு எஸ்.டி.பி.ஐ. சார்பில் பனகல் சாலை திருவள்ளுவர் சிலை அருகே நடந்தது.

  மதுரை

  மின்கட்டண உயர்வை கண்டித்து மதுரை முனிச்சாலை சந்திப்பு அருகே தெற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

  மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது, மாவட்டச் செயலாளர் சீமான் சிக்கந்தர், செயலாளர் ஆரிப்கான், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாநில பேச்சாளர் காஜாமைதீன், தெற்கு தொகுதி செயலாளர் பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர். மதுரை வடக்கு எஸ்.டி.பி.ஐ. சார்பில் பனகல் சாலை திருவள்ளுவர் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

  இதில் பங்கேற்ற நிர்வாகிகள் சிம்னி விளக்கேந்தி, பெட்ரோமாக்ஸ் விளக்குடன் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன், துணைதலைவர் ஜாபர் சுல்தான், வர்த்தக அணி மாநில செயலாளர் கமால்பாட்சா, பாப்புலர் ப்ரண்ட் மாவட்ட தலைவர் அபுதாகீர் உள்பட பலர் கலந்து கொண்டனர். வடக்கு தொகுதி செயலாளர் ஜின்னா நன்றி கூறினார்.

  வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன், பாப்புலர் பிரண்ட் மாவட்ட தலைவர் அபுதாகீர் தமிழ் புலிகள் முகிலரசன் ஆகியோர் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் கோஷம் எழுப்பினார்.

  Next Story
  ×