search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் மாட்டை அவிழ்த்து விட்டதால் பயிர்கள் சேதம்
    X

    கோவில் மாட்டை அவிழ்த்து விட்டதால் பயிர்கள் சேதம்

    • கோவில் மாட்டை அவிழ்த்து விட்டதால் பயிர்கள் சேதம் அடைந்தது.
    • மாட்டை அவிழ்த்து விட்டதால் நெற்பயிரை மேய்ந்தன.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ள அ.கோவில்பட்டியில் ஊமை கருப்பன் கண்மாய் உள்ளது. இந்தக் கண்மாய் பாசனத்தை நம்பி விவசாயிகள் கோடைகால நெற்பயிரை பயிரிட்டுள்ளனர்.

    அந்த பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது. ஆனால் இங்குள்ள கோவில் மாட்டை அவிழ்த்து விட்டதால் நெற்பயிரை மேய்ந்தன. இதில் பயிர்கள் சேதம் அடைந்து விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் விவசாயிகள் கோவில் மாட்டை பிடித்து கிராமத்தில் கட்டிவைத்து புல் மற்றும் தீவனங்களை அளித்து வந்தனர். இனிமேல் மாட்டை கட்டி வைக்கக் கூடாது என்று அந்த பகுதியை சேர்ந்த சிலர் தகராறில் ஈடுபட்டனர். இதுகுறித்து கீழவளவு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    மேலும் மதுரை கலெக்டரிடமும் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு விசாரித்து சென்று விட்டனர். கோவில் மாட்டை அவிழ்த்து விடுபவர்கள் மீதும் காவல்துறையினர் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    Next Story
    ×