என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
- 1459 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.
- 550 சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மதுரை
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை முற்றிலும் தடுக்கும் வகையில் சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று நடந்தது.
மதுரை மாவட்டத்தில் அனைத்து வாக்கு சாவடி மையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார மையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி உள்பட 1459 இடங்களில் இன்று 36-வது மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.
இதில் கிராமப்புற பகுதி களில் அமைக்கப்பட்ட 909 மையங்களில் 909 சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். இதேபோல் மாநகர பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 550 மையங்களில் 550 சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். மொத்தம் 1,459 மையங்களில் இந்த சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.
மதுரை மாவட்டத்தில் 2-ம் தவணையாக 2,34,937 பேருக்கு தடுப்பூசி போட வேண்டி உள்ளது. இதில் கிராமப்புற பகுதிகளில் 1,10,229 பேரும், மாநகர பகுதிகளில் 1,24,708 பேரும் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் 11,68,614 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டி உள்ளது. அவர்களில் 5,91,242 பேர் ஊரக பகுதிகளிலும், 5,77,372 பேர் மாநகர பகுதிகளிலும் உள்ளனர் என்று கண்டறியப்பட்டு உள்ளது.
எனவே சுகாதார பணியாளர்களுடன் ரோட்டரி, லயன்ஸ் கிளப் மற்றும் தன்னார்வ தொண்டு பிரதிநிதிகள், பள்ளி-கல்லூரி என்.எஸ்.எஸ், என்.சி.சி மாண வர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து, மாவட்ட நிர்வாகம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் கூறுகையில், பொதுமக்கள் அனைவரும் நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி போட வேண்டும். கூட்டமான இடங்களில் சமூக இடைவெளி கடை பிடித்தல், முககவசம் அணிதல், பொது இடங்க ளுக்கு சென்று வீடு திரும்பிய பின் முறையாக கைகழுவுதல் போன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றார்.