என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  5 இடங்களில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
  X

  தமுக்கம் அருகில் மாவட்டத்தலைவர் கார்த்திகேயன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  5 இடங்களில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மதுரையில் 5 இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

  மதுரை

  மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சி போராட்டங்களை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் இன்று
  (27-ந்தேதி) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அந்த கட்சி ஏற்கனவே அறிவித்து இருந்தது.

  அதன்படி மதுரையில் 5 இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமுக்கம் தபால் நிலையம் அருகே மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

  அப்போது அக்னிபத் திட்டத்தை கைவிடுமாறும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

  இதேபோல் தெற்குவாசல் பள்ளிவாசல், ஜான்சிராணி பூங்கா இந்திராகாந்தி சிலை, எல்லிஸ் நகர் பி.எஸ்.என்.எல்.அலுவலகம், திருப்பரங்குன்றம் பதினாறு கால் மண்டபம் ஆகிய பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

  இதில் மாநில, மாவட்ட, பகுதி, வார்டு நிர்வாகிகள் உள்பட ௧௦௦-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×