search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாதந்தோறும் ரூ.1,000 வழங்காவிட்டால் அ.தி.மு.க. போராட்டம் நடத்தும்: செல்லூர் ராஜூ பேட்டி
    X

    மாதந்தோறும் ரூ.1,000 வழங்காவிட்டால் அ.தி.மு.க. போராட்டம் நடத்தும்: செல்லூர் ராஜூ பேட்டி

    • 2.10 கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்காவிட்டால் அ.தி.மு.க. போராட்டம் நடத்தும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்தார்.
    • தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய சமுதாயக்கூடத்தை திறந்து வைத்தார்.

    மதுரை

    மதுரை அச்சம்பத்து புது குளத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய சமுதாயக்கூடத்தை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது-

    தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுக ளாகியும் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. இதனால் மக்கள் இந்த அரசு மீது மிகப்பெரிய கோபத்தில் உள்ளனர். எப்போது தேர்தல் வந்தாலும் தி.மு.க.வுக்கு எதிராக வாக்களிக்க தயா ராகி விட்டார்கள்.வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறுவது உறுதியா கிவிட்டது.

    மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் அதிக பணிகள் நடைபெற்றுள்ளன மீனாட்சியம்மன் கோவிலை சுற்றிய சித்திரை வீதிகள் மற்றும் பெரியார் பஸ் நிலையம், விளக்குத்தூண், மன்னர் திருமலை நாயக்கர் மஹால் ஆகிய பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நல்ல முறையில் நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதிகளில் மழை தண்ணீர் விரைவாக வடியும் நிலை உள்ளது.

    ஆனால் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த ஆட்சியை குறை கூறுவதிலேயே கவனம் செலுத்தி வருகிறார்.அவர் தொகுதி மக்களை சந்திக்க வேண்டும். மக்கள் பிரச்சினைகளை கேட்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு எதிராக பேசிவரும் நிதி அமைச்சரை எதுவும் பேச வேண்டாம் என்று தி.மு.க. மேலிடம் அறிவுறுத்தி உள்ளதாக தெரிகிறது.

    இலவச பஸ் பய ணத்திற்காக பஸ்சின் முன் பகுதி மட்டும் பிங்க் நிறத்தில் வர்ணம் பூசுகிறார்கள். மூதாட்டி மற்றும் பெண்கள் பஸ் ஏறுவதற்காக முன்பகுதியை சென்று பார்க்க முடியுமா?

    ஒவ்வொரு குடும்பத்த லைவிகளுக்கும் ரூ.1000 மாதந்தோறும் ஊக்கத்தொகை அளிப்போம் என்றார்கள்.ஆனால் இப்போது பல்வேறு நிபந்தனைகளை விதிப்பதாக தெரி யவந்துள்ளது.

    தமிழகத்தில் உள்ள 2.10 கோடி குடும்ப தலைவிகளுக்கும் மாத ஊக்கத்தொகை ரூ.1000 வழங்க வேண்டும். இல்லாவிட்டால் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் அனுமதிபெற்று அ.தி.மு.க. தீவிர போராட்டத்தை நடத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×