search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்கட்டண உயர்வை கண்டித்து  3 இடங்களில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
    X

    மின்கட்டண உயர்வை கண்டித்து 3 இடங்களில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

    • மின்கட்டண உயர்வை கண்டித்து 3 இடங்களில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

    மதுரை

    மின் கட்டண உயர்வு, மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழக முழுவதும் நாளை (திங்கட்கிழமை) அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி மதுரை மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் 3 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறார்கள். மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முனிச்சாலை சந்திப்பில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. அனைத்து பிரிவு நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்புகிறார்கள்.

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கருப்பாயூரணியில் நாளை காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கிழக்கு மாவட்ட செயலாளர்- அமைப்பு செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார்.

    சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்படுகின்றன.

    மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவில் முன்பு தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. பங்கேற்று சிறப்புரை யாற்றுகிறார். சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அ.தி.மு.க. அனைத்து பிரிவு நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

    நாளை மறுநாள் (26-ந்தேதி) தேனியில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

    மின் கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மாவட்டத்தில் நாளை 3 இடங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அ.தி.மு.க. வினர், பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×