search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை ஆதீனம் மீது நடவடிக்கை - அ.தி.ம.மு.க. கோரிக்கை
    X

    வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன்

    மதுரை ஆதீனம் மீது நடவடிக்கை - அ.தி.ம.மு.க. கோரிக்கை

    • மதுரை ஆதீனம் மீது நடவடிக்கை எடுக்குமாறு அ.தி.ம.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.
    • தன்னை பிரபலப்படுத்தி கொள்வதற்காக தி.மு.க. மீதும், தமிழக அரசு மீதும் தேவையற்ற பரப்புரையை செய்துவருகிறார்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மதுரை ஆதீன மடம் திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட பழமையான மடமாகும். இந்த மடத்திற்கு என தனி சம்பிரதாயங்களும் சடங்குகளும் உண்டு.

    மறைந்த 292 -வது ஆதீனம் அருணகிரிநாதர் தமிழுக்கும் தமிழ் சமுதாயத்திற்கும் எண்ணற்ற தொண்டுகளை செய்துள்ளார். ஜாதி மத பேதமின்றி அனைவரையும் அரவணைத்து செல்லும் குணமும்,திறமையும் நிறைந்தவர்.

    அவர் காட்டிய அன்பால் தமிழர்கள் அனைவர் மனதிலும் அருணகிரிநாதர் இன்னும் வாழ்ந்து வருகிறார்.

    தற்போது புதிய ஆதீனமாக பதவியேற்றுள்ள மதுரை ஆதீனம் தன்னை பிரபலப்படுத்தி கொள்வதற்காக தி.மு.க. மீதும்,தமிழக அரசு மீதும் தேவையற்ற பரப்புரையை செய்துவருகிறார். கோவில் உண்டியல்களில் பணம் போடாதீர்கள் என்கிறார். கோயில் நிர்வாகத்தில் இருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்கிறார்.

    ஏற்கனவே கோயில்க ளில் பல்வேறு முறை கேடுகள் நடத்தப்பட்ட காரணத்தால்தான் அறநிலை துறை தொடங்கப்பட்டது‌ மதுரை ஆதீனத்துக்கு சொத்துக்கள் வந்தது எப்படி?. அவர் நிர்வகித்துவரும் மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கடைகளில் பெறப்படும் வாடகை களுக்கு உரிய முறையில் ரசீது வழங்கப்படுகிறதா? என்பதை எல்லாம் அவர் சிந்தித்து பார்க்க வேண்டும்.

    அரசியல் செய்ய விரும்பினால் தாராளமாக செய்யட்டும் அதற்கு அவர் இன்னும் சில தியாகங்களை செய்தாக வேண்டும்.

    மதுரை ஆதீனம் ஆர்.எஸ்.எஸ். கைப்பாவையாக இருந்துகொண்டு ஆதீன மடத்தின் மாண்புகளை சீர்குலைத்து வருகிறார்.

    சங்கரமடத்திற்கு பாடம் புகட்டியது கடந்த கால திராவிட அரசு எனவே ஆதீன மடத்திற்குள் நடக்கும் அத்துமீறல்களை கண்டு அரசு வேடிக்கை பார்க்க கூடாது. எனவே மதுரை ஆதீனம் தொடந்து மக்கள் மத்தியில் பிரிவினை வாதத்தை விதைத்தால் அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மக்கள் மத்தியில் பிரிவினைவாத கருத்துக்களை தெரிவிப்ப தை அவர் நிறுத்திவிட்டு மடத்தின் மாண்புகளை காக்கும் வகையில் செயல்படுவது அவருக்கு நல்லது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×