search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    4 மாத பயிற்சி திட்டம்: ரூ.13 ஆயிரம் ஊக்கத்தொகை
    X

    சுப்புராம்

    4 மாத பயிற்சி திட்டம்: ரூ.13 ஆயிரம் ஊக்கத்தொகை

    • 4 மாத பயிற்சி திட்டத்துடன் ரூ.13 ஆயிரம் ஊக்கத்தொகை பெட்கிராட் தொண்டுநிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
    • வயது வரம்பு 18 முதல் 35 வயது வரை உள்ளது. பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பயிற்சியில் சேர்ந்து பயனடையலாம்.

    மதுரை

    மதுரை எஸ். எஸ்.காலனி வடக்கு வாசல், அருணாச்சலம் தெருவில் பெட்கிராட் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தாளாளர் எம்.சுப்புராம் கூறியதாவது-

    இந்திய அரசு மற்றும் தமிழக அரசு இணைந்து நடத்தும் கிராமப்புற மாணவர்களுக்கான வேலை வாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் பெட்கிராட் தொண்டு நிறுவனத்தில் தொடங்கப்பட்டுள்ளது. 4 மாத கால இலவச பயிற்சி திட்டத்தில் சேரும் ஆண்கள், பெண்களுக்கு டிடிபி கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு வயது வரம்பு 18 முதல் 35 வயது வரை உள்ளது. பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பயிற்சியில் சேர்ந்து பயனடையலாம்.

    மேலும் பெண்களுக்கு தையல் பயிற்சியும் வழங்கப்படுகிறது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் இதில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு 3 மாத பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி திட்டத்துடன் பாடப் புத்தகம், சீருடை மற்றும் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

    இந்தப் பயிற்சித் திட்டத்தில் இணையும் கிராமப்புற மாணவர்களுக்கு 13 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயிற்சி பெற விரும்புபவர்கள் ஆதார் அட்டை, கல்வி சான்றிதழ்கள், குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் 5 புகைப்படங்கள் ஆகியவற்றை கொண்டு வந்து அலுவலகத்தில் விண்ணப்பம் செய்யலாம்

    2022-23-ம் ஆண்டுக்கான பயிற்சி தற்போது தொடங்கியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் புதிய வேலை வாய்ப்புகளை பெறும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி எடுக்க வேண்டுகிறோம்.

    மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்கு தையல் பயிற்சி மற்றும் ஆண்கள்-பெண்களுக்கு வீட்டு உபயோக மின்சார பொருட்கள் பழுது நீக்கும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்த பயிற்சி காலம் 70 நாட்கள் ஆகும். இந்த பயிற்சியில் சேரும் தாழ்த்தப்பட்ட கிராமப்புற பெண்களுக்கு 13 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்கப்படுகின்றன.

    மேலும் விவரங்களுக்கு ஆரப்பாளையம் சிவபாக்கியம் திருமண மண்டபத்தில் உள்ள பெட்கிராட் மையத்தை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×