search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    240 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
    X

    240 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

    • 240 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • போலீசார் விரட்டி சென்று 3 பேரை பிடித்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டத்தில் புகையிலை, கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆர்லியஸ்ரெபோனியின் மேற்பார்வையில் மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ், கீழவளவு சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், மேலூர் உட்கோட்ட தனி பிரிவு போலீசார், மேலூர் குற்றப்பிரிவு போலீசார் ஆகியோர் மேலூர் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர்.

    அப்போது கீழையூர்-அட்டப்பட்டி சந்திப்பு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த ஒரு ஆட்ேடா மற்றும் 2 மோட்டார் சைக்கிளை மறித்தனர். அப்போது அதில் வந்த 3 பேர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து ஓடினர். உடனே போலீசார் விரட்டி சென்று 3 பேரை பிடித்தனர். தொடர்ந்து போலீசார் ஆட்டோவை சோதனை செய்தபோது 20 மூடைகளில் 240 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தியது தெரியவந்தது.

    இதையடுத்து புகையிலை பொருட்களையும், ஆட்ேடா, 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 3 பேரிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் மேலூர் ஜோதிநகர் சித்திக் (47), அண்ணாகலணி சாகுல்ஹமீது (56), காந்திஜிபூங்கா அலிப்கான் (47) என தெரியவந்தது.

    இவர்களை கைது செய்த போலீசார் புகையிலை பொருட்கள் விற்பனை சம்பந்தமாக வேறு நபர்களுடன் தொடர்பு இருக்கிறதா ? வேறு எங்கு பெரிய அளவில் பதுக்கி வைத்துள்ளார்களா ? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×