என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  புகையிலை பொருட்கள் பதுக்கிய 2 பேர் கைது
  X

  கைதான 2 பேர்

  புகையிலை பொருட்கள் பதுக்கிய 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • புகையிலை பொருட்கள் பதுக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • இதுகுறித்து சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்த 2 பேரை கைது செய்தனர்.

  திருமங்கலம்

  மதுரை மாவட்டம் பேரையூர் டி.எஸ்.பி. சரோஜா உத்தரவின்பேரில் உள்வட்ட குற்றத்தடுப்பு போலீசார் மற்றும் சாப்டூர் போலீசார் அத்திப்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புகையிலைப் பொருட்களை சிலர் பதுக்கி வைத்து கடைகளுக்கு சப்ளை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.

  அதனடிப்படையில் அத்திப்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வீட்டின் பின்புறம் அரசால் தடைசெய்யப்பட்ட 54 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருட்களையும், மேலும் அங்கிருந்த 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

  இதுகுறித்து சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்த அத்திப்பட்டியை சேர்ந்த செல்வராஜன்(வயது65), குணசேகரன்(60) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

  Next Story
  ×