என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
  X

  கோப்பு படம்

  வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
  • அவர்களது பெற்றோரி டம் எழுதி வாங்கிக் கொண்டு காதல் தம்பதியை போலீசார் வழியனுப்பி வைத்தனர்.

  வடமதுரை:

  திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 26). பி.காம் சி.ஏ. முடித்து விட்டு பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

  இவர் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (19) என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு வரவே இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி கோவிலில் திருமணம் செய்து கொண்ட அவர்கள் தாங்கள் சேர்ந்து வாழ பாதுகாப்பு வழங்க வேண்டும் என வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

  சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் இருவரது பெற்றோரையும் வரவழை த்து பேச்சுவார்த்தை நடத்தினார். பெண் வீட்டார் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து அவர்கள் சேர்ந்து வாழ எந்தவித இடையூறும் செய்யக்கூடாது என அவர்களது பெற்றோரி டம் எழுதி வாங்கிக் கொண்டு காதல் தம்பதியை போலீசார் வழியனுப்பி வைத்தனர்.

  Next Story
  ×