என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
நெல்லை அருகே 2 கோவில்களில் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு
- நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் அருகே உள்ள கரிசல்குளம் கிராமத்தில் வடக்குவாச்செல்வி அம்மன் கோவில் உள்ளது
- கோவிலில் கடந்த 16-ந்தேதி பூஜைகளை முடித்துவிட்டு பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் அருகே உள்ள கரிசல்குளம் கிராமத்தில் வடக்குவாச்செல்வி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 16-ந்தேதி பூஜைகளை முடித்துவிட்டு பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.
மீண்டும் நேற்று காலை பூசாரி கோவிலுக்கு சென்று பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு அங்குள்ள அறையில் இருந்த ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பூஜை மற்றும் சமையல் பொருட்கள் திருட்டு போயிருந்தது. இதுதொடர்பாக கோவில் நிர்வாகியான துறையூரை சேர்ந்த வெள்ளத்துரை என்பவர் கங்கைகொண்டான் போலீசில் புகார் அளித்தார்.
இதேபோல் கங்கைகொண்டான் அருகே பருத்திகுளத்தில் உள்ள சுடலைகோவிலில் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.13 ஆயிரம் மதிப்பிலான குத்துவிளக்கு மற்றும் பித்தளை பொருட்கள் திருடப்பட்டு இருந்தன. இதுதொடர்பாகவும் கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 கோவில்களிலும் பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.