என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நாங்குநேரி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
  X

  நாங்குநேரி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அரியகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது தொழிலாளி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
  • நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  நெல்லை:

  நாங்குநேரி அருகே உள்ள வடக்கு ஆரம்பூண்டார்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஐவர்பாண்டி. இவரது மகன் பெரியசாமி (வயது 32). கூலித் தொழிலாளி.

  இவர் நேற்று அரியகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

  இதில் பலத்த காயம் அடைந்த பெரியசாமியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பெரியசாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×