என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பாளையில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; தொழிலாளி சாவு
  X

  பாளையில் மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; தொழிலாளி சாவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இவர் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
  • நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி முருகராஜ் பரிதாபமாக இறந்தார்.

  நெல்லை:

  பாளை அருகே உள்ள பொட்டல் நகர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் முருகராஜ் (வயது 29).

  இவர் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 23-ந் தேதி நெல்லைக்கு மோட்டார் சைக்கிளில் வந்த முருகராஜ் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார்.

  சீவலப்பேரி சாலையில் மணிக்கூண்டு அருகே அவர் சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக முருகராஜ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

  இதில் படுகாயம் அடைந்த முருகராஜை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

  இது தொடர்பாக நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  Next Story
  ×