என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  விக்கிரவாண்டி அருகே மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து கூலி தொழிலாளி சாவு: அதிகாலையில் பரிதாபம்
  X
  சரவணன்.

  விக்கிரவாண்டி அருகே மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து கூலி தொழிலாளி சாவு: அதிகாலையில் பரிதாபம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சரவணன் (வயது 48).இவர் முண்டியம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் சர்க்கரை ஆலையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
  • தூக்க கலக்கத்தில் மொட்டை மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார்.

  விழுப்புரம்:

  விக்கிரவாண்டி ஒன்றியம் வி. சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 48).இவர் முண்டியம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் சர்க்கரை ஆலையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பி இரவு உணவை அருந்தினார். பின்னர், இவர் சொந்தமாக கட்டிவரும் வீட்டில், கைப்பிடி இல்லாத மொட்டை மாடியில் படுத்து தூங்கி விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் தூக்கம் கலைந்து எழுந்தவர், தூக்க கலக்கத்தில் மொட்டை மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி சரவணன் இறந்து விட்டார்.இது தொடர்பாக அவரது மனைவி ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்த சரவணனுக்கு நிரல்யா, தூசிகா என்ற 2 மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×