என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் ஐப்பசி தேரோட்டம் - நாளை மறுநாள் திருக்கல்யாணம்
- கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 11ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது
- திருத்தேர் 4 ரத வீதிகளை சுற்றி வந்து நிலையை அடைந்தது. இரவு 7 மணிக்கு மேல் செண்பகவல்லி அம்பாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்
கோவில்பட்டி:
கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 11ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் ஒவ்வொரு நாளும், அம்பாள் வீதி உலாவந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாள் மண்டகப்படிகாரர்களான கோவில்பட்டி வணிக வைசிய சங்கத்தின் சார்பில் நடைபெற்றது.
இதையொட்டி கோவில் நடை அதிகாலை திறக்கபட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து செண்பகவல்லி அம்மன் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதைத் தொடர்ந்து மேள தாளம் முழங்க பக்தர்களின் கரகோஷம் இடையே திருத்தேர் இழுக்கப்பட்டது. திருத்தேர் 4 ரத வீதிகளை சுற்றி வந்து நிலையை அடைந்தது. இரவு 7 மணிக்கு மேல் செண்பகவல்லி அம்பாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சப்பரத்தில் எழுந்தருளி வணிக வைசிய சங்க கட்டிடத்திற்கு செண்டை மேளம் முழங்க வான வேடிக்கைகளுடன் ஊர்வலம் ஆக வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
நிகழ்ச்சியில் வணிக வைசிய சங்கத் தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்க மாரியப்பன், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் ரத்தினவேல், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பரமசிவம், முன்னாள் தலைவர்கள் பூவலிங்கம், காளியப்பன், வாணியர் பேரவை மாவட்ட தலைவர் பழனிக்குமார், முன்னாள் சங்க பொருளாளர் கருப்பசாமி, மாதவராஜ், ஜெயக்குமார், வணிக வைசிய சங்க இளைஞர்கள் முனிய செல்வம், நம்பிராஜன், மாரியப்பன், மதன், சின்னத்தம்பி, மாரிக்கண்ணன், ரமேஷ், சுந்தர்ராஜ், செல்வா, சங்கதுணைச் செயலாளர் மணிமாறன் மற்றும் முன்னாள் அறங்காவலர் குழுதலைவர் ராஜகுரு, முன்னாள் அறங்காவலர் திருப்பதி ராஜா, தமிழ் மாநில காங்கிரஸ் நகர தலைவர் ராஜகோபால், கோவில் அதிகாரிகள் சிவகளை பிரியா, வெள்ளைச்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வருகிற
22-ந்தேதி இரவு 7.30 மணிக்கு மேல் 8.15-க்குள் ரிஷப லக்னத்தில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்