search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரூரில் தனியார் பள்ளி ஆசிரியர் மீது போக்சோ வழக்கு
    X

    கரூரில் தனியார் பள்ளி ஆசிரியர் மீது போக்சோ வழக்கு

    • ஆசிரியர் நிலவொளி பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவி ஒருவரிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.
    • சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்ற பெற்றோர், பொதுமக்களுடன் சேர்ந்து ஆசிரியர் நிலவொளியை அடித்து உதைத்து தாக்கி தர்மஅடி கொடுத்தனர்.

    கரூர்:

    திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்தவர் நிலவொளி (வயது 42). இவர் கரூர் அருகே கிருஷ்ணராயபுரம் சேங்கல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இந்தநிலையில் ஆசிரியர் இந்த பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவி ஒருவரிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.மேலும், ஆசிரியர் அந்த மாணவியை மிரட்டி அவர் அரைகுறையாக இருக்கும் படங்களை அனுப்ப வைத்து அதனையும் பார்த்து ரசித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்ற பெற்றோர், பொதுமக்களுடன் சேர்ந்து ஆசிரியர் நிலவொளியை அடித்து உதைத்து தாக்கி தர்மஅடி கொடுத்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயம் அடைந்த ஆசிரியர் நிலவொளியை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், லாலாபேட்டை போலீசார் ஆசிரியர் நிலவொளி மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×