என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தே.மு.தி.க மனு
  X

  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தே.மு.தி.க மனு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தே.மு.தி.மு.கவினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
  • 351 மனுக்கள் பெறப்பட்டது.

  கரூர் :

  கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளின் 73 உளளிட்ட 351 மனுக்கள் பெறப்பட்டது.

  மாற்றுத்திறனாளிகள் அளித்த மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொண்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இருவருக்கு ரூ.2,990-ல் கண் பார்வையற்றோருக்கான கைக்கடிகாரம், தலா ஒருவருக்கு தங்கத்தந்தை திட்டத்தின் கீழ் ஆண்களுக்கான கருத்தடை செய்தமைக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, முன்னோடி வங்கி மூலமாக தாட்கோ வங்கிக் கடன் ரூ.1.60 லட்சத்திற்கான ஆணை, கூடை பின்னுதல், சேர் பின்னுதல் போன்ற தொழில் செய்வதற்கு கலெக்டரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.10 ஆயிரத்திற்கான ஆணையினையும், 10 பேருக்கு கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாற்றுத்திறன் தன்னார்வலர்கள் சிறப்பாக செயல்பட்டமைக்கு பாராட்டு நற்சான்றிதழ்களை கலெக்டர் த.பிரபுசங்கர் வழங்கினார்.

  மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சைபுதீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தண்டாயுதபாணி உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

  கூட்டத்தில், கலெக்டர் பிரபுசங்கரிடம், மகாகவி மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் இலவச வீட்டு மனை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் வழங்கப்பட்டு விட்டதை நினைவூட்டும் வகையில் 1,000 கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

  தேமுதிக கரூர் மாநகர செயலாளர் எம்.முத்து அளித்த மனுவில், கார்வழி சீலநாயக்கன்பட் டியில் வசிக்கும் தனியாருக்கு சொந்தமான கிணற்றில் இருந்து லாரிகள் மூலம் கல்குவாரிகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு 100 நடைகளுக்கு மேல் தண்ணீர் எ டுக்கப்படுகிறது. இதனால் அருகில் உள்ள ஊராட்சி ஆழ்குழாய் கிணறு, கிணறு ஆகியவற்றில் நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சாலைகளும் பாதிக்கப்படுகின்றன. எனவே உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

  தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரா.சா.முகிலன் தலைமையில அளித்த மனுவில் ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை ஜூலை மாதத்திற்கு மாற்றி வைத்துள்ளனர். இதனால் விவசாயிகள் பல்வேற பிரச்சனைகளை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இம்மாதம் 30-ந்தேதிக்குள் விவசாயிகள் குறைதீர்ப்புக்கூட்டத்தை நடத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.

  Next Story
  ×