search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டாயி அம்மன் கோவில் முப்பூசை விழா
    X

    பட்டாயி அம்மன் கோவில் முப்பூசை விழா

    • பட்டாயி அம்மன் கோவில் முப்பூசை விழா நடைபெற்றது
    • கரகம் பாலித்தலுடன் தொடங்கியது

    கரூர்:

    கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் எழுதியான்பட்டியில் ஸ்ரீபட்டாயி அம்மன் கோயில் உள்ளது. சுமார் 200க்கும் மேற்பட்ட குடிப்பாட்டுக்காரர்களுக்கு குலதெய்வமாகும். இக்கோயில் முப்பூசை தி ருவிழா 100 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகிறது. ஸ்ரீபட்டாயி அம்மன், ஸ்ரீகாமாட்சி அம்மன், ஸ்ரீகன்னிமாரம்மன் ஆகிய தெய்வங்களுக்கு சுத்த சைவ பூஜையும், காவல் தெய்வங்களான ஸ்ரீமாசி பெரியண்ணசாமி, ஸ்ரீகரிவண்ட ராயர். ஸ்ரீஉத்தண்டிராயர், ஸ்ரீமதுரைவீரன், ஸ்ரீகாத்தவராயன், பட்ட கொளக்காரன், ஸ்ரீநல்லேந்திரன் ஆகிய தெய்வங்களுக்கு முப்பூசை விழா கரகம் பாலித்தலுடன் தொடங்கிய விழா வரும் 12-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இதற்காக மாயனூர் காவிரி செல்லாண்டியம்மன் கோயில் படித்துறையில் பூசாரிகள், பங்காளிகள், மாமன் மைத்துனர்கள், புனித நீராடி, பூஜைகள் செய்வித்த பிறகு கரகம், வேல்கம்பு ஈட்டிகளுடன் பூசாரிகள், சாமியாடிகள் மற்றும் ஏராளமானோர் சுமார் 6 கி.மீட்டர் தூரம் ஊர்வலமாக வந்து கோயிலை அடைந்தனர். பின்னர் அங்கு பூஜை, மாபூஜை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

    முப்பூசையை தொடர்ந்து, கிடாவெட்டு, சாமி கோயிலை வந்தடைதல், காதணி விழாக்கள், முடி இறக்குதல், ஸ்ரீஅக்னி புடவை காரி அம்மனுக்கு சூலை, ஆடு பூஜை அரங்கேற்றம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    Next Story
    ×