என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
பள்ளிக்கு வராத பெண் குழந்தைகள் பற்றி விவரங்கள் சேகரிக்க வேண்டும்.
- பெண் குழந்தைகள் பள்ளிக்கு நீண்ட நாட்களாக வரவில்லை என்றால் அவர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- குழந்தை திருமணத்தை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
கரூர்:
கரூர் மாவட்டத்தில் பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்குவது தொடர்பாக ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில், மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமையில் பள்ளித் தலைமை ஆசிரியர்களுடன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் பேசும் போது, ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான பிரிமெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம் (9, 10ம் வகுப்புகள்), சுகாதார தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகைத் திட்டம் (1 முதல் 10ம் வகுப்பு வரை) ஆகிய 2 திட்டங்களும் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சமூகநீதி, அதிகாரமளித்தல் துறையில் இருந்து பெறப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் 2021 -2022ம் கல்வியாண்டு முதல், மத்திய அரசால் செயல்படுத்தப்படும் மேற்கூறிய இரு கல்வி உதவித் தொகைத் திட்டங்களையும் ஒன்றிணைத்து பட்டியலின, பிற மாணவர்களுக்கான பிரிமெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் என்ற பெயரில் ஒரே கல்வி உதவித்தொகைத் திட்டமாக செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தொடர் விடுமுறை எடுப்பவர்களை கண்காணிக்கவும், சத்துணவு சுவையாக சமைத்து மாணவர்களுக்கு வழங்குவதை கண்காணிக்கவும், பெண் குழந்தை நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராமல் இருந்தால், அவர்களைக் குறித்த விபரங்களை சேகரிக்க வேண்டும். குழந்தை திருமண த்தை தடுத்தல்
குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் என் குப்பை, எனது பொறுப்பு என உணர்ந்து பள்ளி வளாகத்தை சுத்தமாக வைக்க வேண்டும், மாணவர்கள் மூலம் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தலைக்கவசம் அணிவதைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத் தவேண்டும் என்றார்.