search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமராவதி ஆற்றின் கரையோர மக்களுக்கு கலெக்டர் அபாய எச்சரிக்கை
    X

    அமராவதி ஆற்றின் கரையோர மக்களுக்கு கலெக்டர் அபாய எச்சரிக்கை

    • அமராவதி ஆற்றின் கரையோர மக்களுக்கு கலெக்டர் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • 12,500 கன அடி நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது

    கரூர்:

    அமராவதி ஆற்றில் உபரி நீர் திறக்கும் சூழ்நிலை உள்ளதால் கரையோர மக்களுக்கு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் நேற்று மதியம் 1 மணியளவில் 82 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 12,500 கன அடி நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அமராவதி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்படும் சூழ்நிலை இருப்பதாக நீர் வளத்துறை அமராவதி வடிநில உட்கோட்டம் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். எனவே, அமராவதி ஆற்றின் கரையோர தாழ்வான பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வினை ஏற்படுத்திடவும், தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×