search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை  .
    X

    காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை .

    • காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.
    • அமராவதி ஆற்று நீர் திறப்பு அதிகரித்துள்ளது

    கரூர்:

    காவிரி மாயனூர் கதவணைக்கு 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் காவிரி கரையோர மக்களுக்கு நொய்யல் பகுதியில் தண்டோரா மூலம் எச்சரிக்கை வி டுக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர் அணை நேற்று காலை 8 மணிக்கு நிரம்பியது. அணைக்கு நீர்வரத்து 1,24,113 கன அடி நீர் வரும் நிலையில், 1.23 லட்சம் கன அடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நேற்று முன்தினமே மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    மாயனூர் கதவணைக்கு நேற்று முன்தினம் 17,784 கன அடி தண்ணீர் வந்துக்கொண்டிருந்த நிலையில் அவை காவிரி மற்றும் வாய்க்கால்களில் திறக்கப்பட்டது. மாயனூர் கதவணைக்கு நேற்று காலை 6 மணிக்கு நீர் வரத்து 66,867 ஆக அதிகரித்தது. காலை 10 மணிக்கு 82,422 கன அடியாகவும், மதியம் 12 மணிக்கு 92,942 கன அடியாகவும், மதியம் 2 மணிக்கு இது 1,00,896 கன அடியாக அதிகரித்தது.

    இதில் 99,876 கன அடி காவிரி ஆற்றிலும், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மற்றும் தென்கரை வாய்க்கால் ஆகியவற்றால் தலா 400 கன அடியும, கட்டளை மேட்டு வாய்க்காலில் 200 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

    காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து நேற்று படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியில் காவிரி ஆற்றில் யாரும் இறங்கவேண்டாம் என தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் கடந்த 13ம் தேதி மதியம் 1 மணியளவில் 82 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 12,500 கன அடி நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அமராவதி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்படும் சூழ்நிலை இருப்பதாகவும் எனவே, அமராவதி ஆற்றின் கரையோர தாழ்வான பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வுடன் இருக்கும்படி எச்சரிக்கப்பட்டது.

    கடந்த 14ம் தேதி அமராவதி ஆற்றில் 1,025 கன அடியாக இருந்த நீர் திறப்பு, 15ம் தேதி 1,746ஆகவும், 16ம் தேதி 2,905ஆகவும் அதிகரிக்கப்பட்டது. அமராவதி ஆற்றில் நீர் திறப்பு அதிகரித்துள்ளதால் யாரும் ஆற்றுக்குள் இறங்கவேண்டாம் என கரூர் கொளந்தானூர் பகுதியில் நேற்று முன்தினம் அறிவிப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் அமராவதி ஆற்று நீர் திறப்பு நேற்று 2,973ஆக அதிகரித்துள்ளது.

    Next Story
    ×